crossorigin="anonymous">
வெளிநாடு

இந்தியா கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தியது

இந்தியா - கனடா இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவில் விரிசல்

இந்தியா மத்திய அரசு அதிரடி நடவடிக்கையாக கனடா நாட்டினருக்கு விசா வழங்குவது இன்று (21) முதல் நிறுத்தம் செய்துள்ளது

மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டினருக்கு விசா வழங்குவது நிறுத்தம் செய்ய இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக விசா வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனமான பிஎல்எஸ் இன்டர்நேஷனல் தனது இணையதளத்தில்,
“இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு: செயல்பாட்டுக் காரணங்களுக்காக, செப்.21-ம் திகதி முதல், அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்திய விசா சேவை நிறுத்தப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு பிஎல்எஸ் இணையதளத்தைப் பாருங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீக்கியரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: