crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 178 கொவிட்19 தொற்றாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 178 கொவிட்19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அதனடிப்படையில் காத்தான்குடி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 40 நபர்களும், ஓட்டமாவடி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 26 நபர்களும், ஏறாவூர் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 22 நபர்களும், மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 19 நபர்களும், செங்கலடி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 13 நபர்களும், ஆரையம்பதி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 11 நபர்களும்

களுவாஞ்சிக்குடி மற்றும் கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்தியதிகாரி ஆகிய பிரிவுகளில் தலா 10 நபர்களும், வெல்லாவெளி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 9 நபர்களும், கிரான் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 8 நபர்களும், வாகரை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 5 நபர்களும், பட்டிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 2 நபர்களும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், இரண்டு பேர் சிறைச்சாலையிலும் ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 5400 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், 76 நபர்கள் மரணமடைந்துள்ளதுடன், இதுவரை 3623 நபர்கள் குணமடைந்து வீடு சென்றுள்ளனர், 1524 நபர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூன்றாவது அலையில் 4417 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், 67 நபர்கள் மரணமடைந்துள்ளனர். காத்தான்குடி, கோரளைப்பற்று மத்தி மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் திடீர் தொற்று அதிகரிப்பினால் சில கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

காத்தான்குடி பிரிவில் 8 கிராம சேவையாளர் பிரிவுகளும், கோறளைப்பற்று மத்தி பிரிவில் ஒரு கிராம சேவையாளர் பிரிவும், மட்டக்களப்பு பிரிவில் 2 கிராம சேவையாளர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான புதிய தொற்றாளர்களுக்கான காரணம் ஒன்றுகூடலே ஆகும் மக்கள் இவற்றை தவிர்ப்பதன் மூலம் கொவிட் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமென” பணிப்பாளர் தெரிவித்தார்..

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: