crossorigin="anonymous">
உள்நாடுபொது

வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு

நிறைவுகாண் மருத்துவ தொழிற்சங்கவியலாளர்களின் கூட்டு ஒன்றிய இன்று (24) காலை 8:00 மணி முதல் 24 மணித்தியாலங்கள் வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படும் என ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பிற்கு கதிரியக்க நிபுணர்கள், ஆய்வுகூட வல்லுனர்கள், ஒளடதவியலாளர்கள் உள்ளிட்ட பல துறையைச் சார்ந்தவர்கள் ஆதரவளிக்கவுள்ளனர்.

07 கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்திய நிபுணர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டாலும், மகப்பேறு மருத்துவமனைகள், குழந்தைகள் மருத்துவமனைகள், புற்றுநோய் மருத்துவமனைகள், சிறுநீரக மருத்துவமனைகளை பாதிக்காது எனவும் நிறைவுகாண் மருத்துவ தொழிற்சங்கவியலாளர்களின் கூட்டு ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 9 =

Back to top button
error: