crossorigin="anonymous">
வெளிநாடு

காவல்துறையின் விசாரணை ‘மெதுவானது’ மற்றும் ‘மிகவும் மந்தமானது’ – நீதிமன்றம்

மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டவழக்கு

இந்தியா – மணிப்பூரில் 2 பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையால் நாட்டையே உலுக்கிய வீடியோ தொடர்பான வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம், அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு இயந்திரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்று அதிருப்தி தெரிவித்துள்ளது. மாநில காவல்துறையின் விசாரணையை ‘மெதுவானது’ மற்றும் ‘மிகவும் மந்தமானது’ என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மீதான கட்டுப்பாட்டை காவல்துறை முற்றிலும் இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், இதற்காக மணிப்பூர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் அடுத்த விசாரணையில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூரில் நிலவும் சூழல் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணை தொடங்கியது.

மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது அணிவகுப்பு தொடர்பான வீடியோ ‘மிகவும் கவலையளிக்கிறது’ என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் மிகவும் தாமதம் ஏற்பட்டதாக கூறியுள்ளது.(நன்றி – பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 2 =

Back to top button
error: