உள்நாடுபொது

இலங்கை கடற்படை சிலாபத்தில் 23 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்

இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது சிலாபம், முக்கு தொடுவாவ கடற்கரையில் நேற்று முன்தினம் (20) வடமேற்கு  கடலில் மிதந்த 10 பொட்டலங்களில் அடைக்கப்பட்ட 23 கிலோ மற்றும் 100 கிராம் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேவேளை கடந்த 18, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் மாத்திரம் சிலாபம் கடல் பகுதியில் இருந்து சுமார் 308 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்

‍‍‍சிலாபம் பகுதியில் கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபடும் கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை சிலாபம் பொலிஸாருடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: