உள்நாடுபொது

20 கோடி ரூபா மேலதிக நிதி ஒதுக்கீடு பிரேரணை பாராளுமன்றத்தில்

இலங்கை பாராளுமன்றம் இன்றும் (22) நாளையும் (23) கூடவுள்ளதுடன் இந்தவார பாராளுமன்ற அமர்வை இரண்டு நாட்களுக்கு வரையறுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  நேற்று (21)  நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 20 கோடி ரூபா பெறுமதியான மேலதிக நிதி ஒதுக்கீடு பிரேரணை பாராளுமன்றத்தில் நாளை முன்வைக்கப்படும்.

கொரோனா வைரசு தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் தேவையான செலவினங்களை சமாளிப்பதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று இடம்பெற்றதுடன் இதன்போது இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

காணி அபிவிருத்தி கூட்டுத்தாபன திருத்த சட்ட மூலமும், காணிகளை சுவீகரிக்கும் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதியும் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: