crossorigin="anonymous">
உள்நாடுபொது

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி தொடர்பில் ‘Tax File’

2024 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும்

இலங்கையர்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் கோப்பு (Tax File) ஒன்றை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் மே மாதம் 31 ஆம் திகதி வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு ஏற்ப 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் அடுத்த வருடம் 2024 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் கோப்பொன்றை திறக்க வேண்டும்.

தற்போதும் ஒரு இலட்சம் ரூபாவிற்கு அதிக வருமானம் பெறுவோரிடம் இருந்து 6 முதல் 36 வீதம் வரை உழைக்கும்போது பெறப்படும் வரி அறவிடப்படுகின்ற சூழ்நிலையிலேயே புதிய வரிக் கோப்புகளை திறக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானியில் 14 துறைகளை சேர்ந்தவர்களும் கோப்புகளை திறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. பிரதேச செயலகங்களில் வியாபாரங்களை பதிவு செய்தவர்கள்
2. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் அல்லது உழவு இயந்திரம் உட்பட எந்தவொரு வாகனத்தையும் வைத்திருக்கும் நபர்கள்
3. உறுதிப்பத்திரம் மூலம் ஏதேனும் நிலையான சொத்தை வாங்கிய அல்லது சொத்துகளுக்கு உரித்துடையவர்கள்
4. கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்கு உள்ளூராட்சி மன்றத்திடம் திட்ட அனுமதி பெற்றவர்கள்
5 தொழில்முறை வங்கியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்
6 இலங்கை கட்டடக்கலை நிறுவகத்தின் உறுப்பினர்கள்
7 இலங்கை நில அளவையாளர் நிறுவனத்தின் உறுப்பினர்கள்
8 சட்டத்தரணிகள்
9 இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள்
10 இலங்கை பட்டயக் கணக்காய்வாளர் நிறுவனத்தின் உறுப்பினர்கள்
11 சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளர்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள்
12. மாதாந்தம் சேவையாளர், வழங்குநரின் தொகையுடன் சேர்த்து 20,000 ரூபாவிற்கு அதிகமான தொகையை ஊழியர் சேமலாப நிதியத்திற்கு செலுத்தும் ஊழியர்கள்
13. இலங்கை பொறியியல் நிறுவனத்தின் உறுப்பினர்கள்
14. இலங்கையில் எந்தவொரு சேவையையும் வழங்கி மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா அல்லது வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாவினை ஆகக்குறைந்த வருமானமாக பெறுவோர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 1 = 4

Back to top button
error: