crossorigin="anonymous">
வெளிநாடு

துருக்கியின் ஜனாதிபதியாக மீண்டும் ரஸப் தய்யீப் எர்டோகன் தெரிவு

எர்டோகன் 52% வாக்குகள் அவரை எதிர்த்திப் போட்டியிட்ட கெமால் 48 சதவீத வாக்குகள்

துருக்கி நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் 69 வயதாகும் ரஸப் தய்யீப் எர்டோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார். 2003 முதல் 2014 வரை துருக்ஜனாதிபதிகியின் பிரதமராக இருந்த அவர், 2014-ஆம் ஆண்டு அப்பதவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமாக அதிபர் பதவியை கொண்டு வந்தார். அதன்பிறகு தற்போது வரை துருக்கியின் ஜனாதிபதியாக நாட்டை ஆட்சி செய்து வந்தார்.

மே 15 ஆம் தேதி துருக்கி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் எர்டோகன் 49.6% வாக்குகளும், கெமல் கிலிக்டரோக்லு 44.7% வாக்குகளும், தேசியவாத வேட்பாளர் சின ஒகன் 5.2% வாக்குகளும் பெற்றனர்.

துருக்கியின் அரசியல் அமைப்பு படி தேர்தலில் 50% வாக்குகளை பெற்றால்தான், அது பெரும்பான்மை. அந்த வகையில் 0.4% வாக்குகள் குறைவாக பெற்றதால், பெரும்பான்மையை எர்டோகன் தவறவிட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்தச் சுற்று தேர்தல் துருக்கியில் மே 28-ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிலையில் 99% வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட சூழலில் எர்டோகன் 52% வாக்குகளும் அவரை எதிர்த்திப் போட்டியிட்ட கெமால் 48 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் துருக்கி தேர்தல் ஆணையமும் எர்டோகன் வெற்றியை உறுதி செய்துள்ளது. மீதமுள்ள 1 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு அதில் கெமால் நிறையா வாக்குகள் பெற்றாலும்கூட இந்த 52 சதவீதத்தை நெருங்க இயலாது என்பதால் வெற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்னை நம்பி மேலும் 5 ஆண்டுகள் அளித்துள்ள மக்களுக்கு தய்யீப் எர்டோகன் நன்றி தெரிவித்துள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 4

Back to top button
error: