crossorigin="anonymous">
உள்நாடுபொது

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 29 முதல் ஜூன் 08 வரை

மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் தடை

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 29ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 08ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

ஆகையினால் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் 23.05.2023 நள்ளிரவு முதல் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.

எதிர்பார்ப்பு வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், அவற்றை விநியோகித்தல், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் வினாக்களை விளம்பரப்படுத்துதல் போன்றனவும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

எவரேனும் ஒருவர் அல்லது அமைப்பு இவற்றை மீறினால், அது குறித்து பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் தலைமையகம் 011 2421111
பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு 119
பரீட்சை திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கம் 1911
பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறு கிளை 0112784208 / 011 2784537

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 + = 58

Back to top button
error: