crossorigin="anonymous">
ஆக்கங்கள்

“பாராளுமன்ற சார சங்ஹிதா” நூலின் மூன்றாவது தொகுதி வெளியீடு

இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட பாராளுமன்ற சார சம்ஹிதா ஆய்வுப் புலமை இலக்கிய நூலின் மூன்றாவது தொகுப்பின் வெளியீடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (11) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

‘பாராளுமன்ற சார சங்ஹிதா’ ஆய்வுப் புலமை இலக்கிய நூலின் மூன்றாவது தொகுப்பின் முதலாவது பிரதியை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு வழங்கிவைத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெகுஜன ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும் இதன் பிரதிகள் வழங்கப்பட்டன.

இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவின் வழிகாட்டின் கீழ் “பாராளுமன்ற சார சங்ஹிதா” ஆய்வுப் புலமை இலக்கிய நூலுக்கான கட்டுரைகள் கடந்த வருடம் முதல் சேகரிக்கப்பட்டிருந்தன.

உலகமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலுக்கு எதிரான போக்குகளின் மத்தியில் பாராளுமன்ற முறைமைகள் என்ற பிரதான தொனிப்பொருளின் கீழ், சமூக ஊடகங்கள், மக்கள் பங்களிப்பு, பாராளுமன்றம் தொடர்பான பொதுமக்களின் அறிவாற்றல், உலகமயமாக்கல் மற்றும் சர்வதேசத் தொடர்புகள், பாராளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் மற்றும் ஜனநாயகம், தகவல் சமூகம், தொடர்பாடல், சட்டமியற்றும் நடைமுறை மற்றும் பாராளுமன்ற ஜனநாயகம், புதிய இயல்புநிலையில் பிரதிநிதித்துவ ஜனநாயகம், ஆரசியலில் பெண்கள் மற்றும் இளைஞர்கள், அரசியல் கலாசாரம், சமூகமயமாக்கல், ஜனநாயகம் மற்றும் கல்வி, பாராளுமன்ற தொடர்பாடல் மற்றும் தேசிய மொழிக் கொள்கை, சட்டமியற்றும் நடைமுறை மற்றும் ஊடகங்களின் செல்வாக்கு, மெய்நிகர் பொதுவெளி மற்றும் ஜனநாயகத்தை மறுபரிசீலனை செய்தல், அங்கவீனமுற்றோரின் நல்வாழ்வு போன்ற உபதலைப்புக்களின் கீழ் கட்டுரைகள் உள்ளடங்கியுள்ளன.

இதில் மீளாய்வுக் குழுவின் சார்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ரத்னசிறி அரங்கல, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜயதேவ உயங்கொட, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் அஜந்தா ஹப்புஆராச்சி, களனி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஜீ. யோகராஜா, கொழும்பு பல்கலைக்கழக ஸ்ரீபாளி பீடத்தின் பேராசிரியர் டியூடர் வீரசிங்க ஆகியோர் இணைந்துகொண்டிருந்தனர்.

“பாராளுமன்ற சார சங்ஹிதா” ஆய்வுப் புலமை இலக்கிய நூலின் மூன்றாவது தொகுதி நாடு முழுவதிலும் உள்ள நூலகங்கள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் வழங்கி வைக்கப்படவுள்ளது.

“பாராளுமன்ற சார சங்ஹிதா” ஆய்வுப் புலமை இலக்கிய நூலின் நான்காவது தொகுதிக்கான கட்டுரைகளைக் கோருவதற்கான அறிவிப்பை பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்களப் பதில் பணிப்பாளருமான எச்.ஈ.ஜனகாந்த சில்வா இந்நிகழ்வில் வெளியிட்டார்.

உலகமயமாக்கலுக்குப் பின்னரான சூழலில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற பிரதான தொனிப்பொருளின் கீழ் ஏழு உப தலைப்புக்களில் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பாராளுமன்ற திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 2 =

Back to top button
error: