crossorigin="anonymous">
உள்நாடுபொது

முன்னாள் சட்ட மா அதிபரை கைது செய்வதை தடுத்து இடைக்கால தடை உத்தரவு

மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது

இலங்கையின் முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்வது அல்லது அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (24) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் சட்ட மா அதிபர் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலமளிக்க வருமாறு பொலிஸ் பங்கரவாத விசாரணைப் பிரிவு மூன்று சந்தர்ப்பங்களில் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கு எதிராக முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதிபதி ஏ..மரிக்கார் ஆகியோர் அங்கம் வகிக்கும் நீதிபதிகள் குழாம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் சட்ட மா அதிபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவுட

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 1

Back to top button
error: