crossorigin="anonymous">
உள்நாடுபொது

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக டிலான் பெரேரா

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டிலான் பெரேரா இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டார்.

இவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல் முன்மொழிந்ததுடன், கௌரவ கெவிந்து குமாரதுங்க இதனை வழிமொழிந்தார்.

ஆளும் கட்சி உறுப்பினரால் தனது பெயர் முன்மொழியப்பட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரினால் வழிமொழியப்பட்டு குழுவின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமையையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகக் கௌரவ டிலான் பெரேரா இங்கு குறிப்பிட்டார்.

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம், இழப்பீடுகள் பற்றிய அலுவலகம், சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட சீர்திருத்தத் திணைக்களம், அரசாங்க மொழிகள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களைக் குழு முன்னிலையில் கலந்துரையாடல்களுக்கு அழைக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் குழு உறுப்பினர்களான கௌரவ ஏ.எல்.எம்.அதாவுல்லா, கௌரவ குலசிங்கம் திலீபன், கௌரவ மயாதுன்ன சிந்தக அமல், கௌரவ கெவிந்து குமாரதுங்க, கௌரவ (திருமதி) ரஜிகா விக்ரமசிங்க, கௌரவ எம்.ஏ.சுமந்திரன், கௌரவ இசுரு தொடங்கொட ஆகியோர் கலந்துகொண்டனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 23 − = 14

Back to top button
error: