crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் நேற்றைய தினம் 2,456 கொவிட்19 தொற்றாளர்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 2,456 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் (677) கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கொவிட்-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்திலிருந்து 320 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 315 பேரும், காலி மாவட்டத்தில் இருந்து 259பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 255 பேரும் நேற்றைய தினம் (17) வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார், பதுளை, கேகாலை ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா 5 பேர் வீதமும், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா 17 பேர் வீதமும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குவர்.

பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 82 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 19 பேரும், மொனராகலை மாவட்டத்திலிருந்து 20 பேரும், குருநாகல் மாவட்டத்திலிருந்து 60 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 84 பேரும், அம்பாறை மாவட்டத்திலிருந்து 46 பேரும் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்திலிருந்து 25 பேரும், கண்டி மாவட்டத்திலிருந்து 34 பேரும், மாத்தளை மாவட்டத்திலிருந்து 46 பேரும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 56 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 51 பேரும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த 23 பேரும் நேற்றைய தினம் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 3

Back to top button
error: