வெளிநாடு

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ‘லாம்ப்டா’ உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ்

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் லாம்ப்டா என்ற புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெருவில் கண்டறியப்பட்டது. இந்த வகையான வைரஸ் 29 அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அர்ஜெண்டினா, சிலி போன்ற நாடுகளில் இந்த வகை வைரஸ் பரவியுள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த வைரஸின் தாக்கம் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ்கள், கிரேக்க எழுத்துகளான ஆல்ஃபா, பீட்டா, காமா ஆகிய வடிவத்தில் குறிப்பிடும்போது எளிதாக அடையாளப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து, உருமாறிய கொரோனா வைரஸ்களுக்குப் பெயரையும் வெளியிட்டது.

இந்த நிலையில் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு லாம்ப்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 17 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 38 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.(இந்து)

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: