crossorigin="anonymous">
பிராந்தியம்

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. காலமதி பத்மராஜா தலைமையில் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றைய தினம் (02) கல்லடி கடற்கரை பகுதியில் சிரமதான பணி இடம்பெறவுள்ளன

சுதந்திர தினத்தை முன்னிட்டு சூழல் நேய பசுமை வேலைத் திட்டத்தின் கீழ் பெப்ரவரி முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் சிரமதான பணிகளை முன்னெடுப்பதற்காக திட்டம் தீட்டியுள்ளமைக்கு அமைவாக மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள வாவிக்கரையோரங்களில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வானது கச்சேரி படகு இறங்கு துறையில் இருந்து கோட்டை பூங்கா ஊடாக வாவிக்கரை 02 மற்றும் வாவிக்கரை 01 இலிருந்து லகூன் பார்க் வரை சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இச்சிரமதான நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், இராணுவ படைவீரர்கள், மாநகர சபை ஊழியர்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணியாளர்கள், இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 3 =

Back to top button
error: