crossorigin="anonymous">
பொது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பிரத்தியேக வகுப்புகள் தடை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை இன்று (14) நள்ளிரவு முதல் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடையும் வரை இத்தடை அமுலில் இருக்குமென திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2015 ஓகஸ்ட் 12ஆம் திகதி 1927/49 எனும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, 1968ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க திருத்தப்பட்ட பகிரங்க பரீட்சைகள் சட்டத்தின் 22ஆம் பிரிவிற்கமைய, தரம் 05 – புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 33 − 31 =

Back to top button
error: