crossorigin="anonymous">
உள்நாடு

உடன் அமுலுக்கு வரும் வகையில் சற்றுமுன் ஜனாதிபதி ரணில் விதித்த அதிரடி உத்தரவு!

பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி என்பவற்றை கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மைய நாட்களில் விலங்குகள் திடீரென உயிரிழந்ததையடுத்தே ஜனாதிபதியினால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக பதிவாகியுள்ள காலநிலை மாற்றங்களுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக விவசாய அமைச்சின் கால்நடைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மிருக மரணங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, இதுவரை வடமாகாணத்தில் உயிரிழந்த மாடுகளின் மொத்த எண்ணிக்கை 358 ஆகவும், 352 மாடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன. மேலும் அந்த மாகாணத்தில் 191 ஆடுகள் இறந்த நிலையில் 53 ஆடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன.

கிழக்கு மாகாணத்தில் உயிரிழந்த மாடுகளின் மொத்த எண்ணிக்கை 478 ஆகவும், ஆபத்தான நிலையில் உள்ள மாடுகளின் எண்ணிக்கை 352 ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும் 65 ஆடுகள் இறந்துள்ளன.

இந்தியாவை பாதித்த சூறாவளியுடன் கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரையோரங்களில் ஏற்பட்ட கடுமையான குளிர் காலநிலை காரணமாக இந்த விலங்குகள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது, ஆனால் இந்த விலங்குகள் மற்றொரு தொற்றுநோய் காரணமாக இறந்ததா? அதை உறுதி செய்யும் வகையில், இறந்த அனைத்து கால்நடைகளின் மாதிரிகளையும் கால்நடை துறையினர் எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 8 = 2

Back to top button
error: