crossorigin="anonymous">
உள்நாடு

மீண்டும் மோசமான நிலையை எட்டிய காற்றின் தரம் – பொதுமக்கள் அவதானம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இன்றைய தினம் இலங்கையின் சில பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண் 190 ஐ விட அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பில் 191 ஆகவும், பதுளையில் 169 ஆகவும், கேகாலையில் 155 ஆகவும், களுத்துறையில் 146 ஆகவும், கண்டியில் 126 ஆகவும், இரத்தினபுரியில் 114 ஆகவும், குருநாகலையில் 106 ஆகவும், காலியில் 97 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.

நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை காரணமாக இந்தியாவில் இருந்து தூசு அடங்கிய காற்று இலங்கை நோக்கி வீசுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக காற்று மாசு தரக்குறியீடானது அதிகரிப்பதால், சுகாதார ரீதியான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்று மாசடைவு, சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. காற்று மாசடைந்து காணப்படுகின்ற சந்தர்ப்பங்களில் தரமான முகக்கவசங்களை அணிந்து வெளியில் நடமாடுவதே உகந்தது என சுகாதார தரப்பினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 6

Back to top button
error: