crossorigin="anonymous">
பொது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18

இலங்கை பரீட்சைகள் திணைக்களம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக, அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 2,894 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை, இப்பரீட்சையின் 60 வினாக்கள் கொண்ட (பல்தேர்வு, சுருக்க விடைகள்) பகுதி II வினாத்தாள் முதலிலும்,

இடைவேளையைத் தொடர்ந்து 40 வினாக்கள் கொண்ட (3 தெரிவுகள் கொண்ட பல்தேர்வு வினாக்கள்) பகுதி I வினாத்தாளும் வழங்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இப்‌ பரீட்சைக்காக விண்ணப்பித்த சகல பரீட்சார்த்திகளினதும்‌ வரவு இடாப்பு உறிய பாடசாலை அதிபர்களுக்குத்‌ தபாலில்‌ தற்போது அனுப்பப்பட்டூள்ளன.

இதுவரையில்‌ இவ்‌ வரவு இடாப்பு ஆவணம்‌ கிடைக்கப்பெறாத பாடசாலைகளின்‌ அதிபர்கள்‌ துல்‌ ஆவணத்தைப்‌ பெற்றுக்கொள்வதற்காக கீழே தரப்பட்டுள்ளவாறு செயற்பட வேண்டும்‌.

இப்‌ பரீட்சைக்கு நிகழ்நிலை முறைமையின்‌ மூலம்‌ விண்ணப்பித்த பரி்சார்த்திகளின்‌ விவரங்களடங்கிய அச்சுப்பிரதியுடன்‌, வேண்டுகாள்‌ கடிதமொன்றையும்‌ இணைத்து இத்திணைக்களத்தின்‌ பாடசாலைப்‌ பரீட்சைகள்‌ ஒழுங்கமைப்பு, பெறுபேற்றுக்‌ கிளைக்கு உடனடியாக வருகைதந்து அவ்‌ ஆவணத்தைப்‌ பெற்றுக்கொள்ள வேண்டும்‌.

தொலைபேசி இலக்கம்‌ : 011- 2785922, 278420, 2784537, 278616.
அவசர அழைப்பு இலக்கம்‌ : 119
தொலைநகல்‌ இலக்கம்‌ : 011-278422
தபால்‌ முகவரி :
பரீட்சை ஆணையாளர்‌ நாயகம்‌,
பாடசாலைப்‌ பரீட்சைகள்‌ ஒழுங்கமைப்புக்‌ கிளை,
இலங்கை பரீட்சைத்‌ திணைக்களம்‌,
பெலவத்தை, பத்தரமுல்ல

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 81 − = 74

Back to top button
error: