crossorigin="anonymous">
பொது

க.பொ.த உயர் தர வெட்டுப்புள்ளிகள் தயார் நிலையில்

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு க.பொ.த உயர் தர வெட்டுப்புள்ளிகளை நாளை (02) வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

க.பொ.த உயர் தரம் 2021 (2022) பரீட்சை பெறுபேறுகளின் படி பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளியே வெளியாகவுள்ளது

க.பொ. த உயர் தர 2021(2022) பரீட்சைக்காக பாடசாலை விண்ணப்பதாரிகள் 2,36,035 பேரும், தனியார் பரிட்சார்த்திகள் 36,647 பேருமென மொத்தம் 2,72,682 பேரும் தோற்றி இருந்தனர். இதில் 1,71,497 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக குறைந்தபட்ச தகுதிகளை பெற்றிருந்தனர்.

பல்கலைக்கழக அனுமதிக்காக குறைந்தபட்ச தகுதியைப் பெற்றுக் கொண்டவர்களில்1,49,946 பேர் பாடசாலை மாணவர்களாவர்.இவர்களில் 21,551 தனியார் பரீட்சார்த்திகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சை முடிவுகளின் படி அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 42, 519 மாணவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 3 =

Back to top button
error: