crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

வலய தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவைக்கான மையம் ஆரம்பித்து வைப்பு

திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளரின் சிந்தனையில் உருவான வலய தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவைக்கான மையம் நேற்று வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிரீதரன் தலமையில் திருகோணமலை வலயக் கல்வி அலுவலக வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகம் மக்கள் சேவை மன்றத்திற்கு விடுத்த விசேட வேண்டுகோளின் அடிப்படையில் அவுஸ்ரேலியாவில் இயங்கிவரும் வன்னி ஹோப் மற்றும் ஐக்கிய இராஜியத்தில் இயங்கிவரும் ரட்ணம் பவுன்டேஷன் ஆகிய தொண்டு நிறுவனங்களின் நிதிப்பங்களிப்புடன் மேற்படி தொழில் வழிகாட்டல் சேவை மையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடுபுராகவுள்ள உள்ள எந்தொவொரு வலயக் கல்வி அலுவலகங்களிலும வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை சேவை மையம் தாபிக்கப்பவில்லை என்பதுடன் இதுவே முதற்தடவையாக தாபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருமலை வலயத்தில் உள்ள சுமார் முப்பத்திரெண்டாயிரம் மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள், பாடசாலையைவிட்டு இடைவிலகிய இளைஞர் யுவதிகள் நன்மையடையும் வகையில் இந்த வளநிலையம் தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வன்னி ஹோப் நிறுவனத்தின் இயக்குநர்களான டாக்டர் மாலதி வரன், எம்.ரீ.எம். பாாிஸ், திருமலை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய சேவைக்கால ஆலோசகர்கள், மக்கள் சேவை மன்றத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 59 + = 64

Back to top button
error: