crossorigin="anonymous">
வெளிநாடு

சீனாவின் ஜனாதிபதியாக மீண்டும் ஜி ஜின்பிங்

சீனாவின் 3வது முறையாகவும் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் இன்று (23) அறிவிக்கப்பட்டார்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 16-ம்தேதி தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் 2,300 பேர் கலந்து கொண்டனர்.

இதில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஜி ஜின்பிங் மீண்டும் இன்று  ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார்.

69 வயதாகும் ஜி ஜின்பிங், சீன ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் அவர் நியமனத்திற்கான அறிவிப்பு முறைப்படி எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்படுவார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 47 − = 46

Back to top button
error: