crossorigin="anonymous">
பொது

குழந்தைகளின் மரணத்துடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி செய்யப்படவில்லை

காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்து வகைகள், இலங்கையில் இறக்குமதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஹரியாணாவில் இருந்து தயாராகும் அந்த நான்கு மருந்துகள் – ப்ரோமெதாசின் ஓரல் சொல்யூஷன்(Promethazine Oral Solution) , கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப் (Kofexmalin Baby Cough Syrup), மாகோஃப் பேபி காஃப் சிரப் (Makoff Baby Cough Syrup) மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் (Magrip N Cold Syrup) என்ற பெயரில் விற்கப்படுகின்றன.

ப்ரோமேதசைன் ஓரல் சொல்யூசன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மேக்காஃப் பேபி காஃப் சிரப், மேக்ரிக் என் கோல்டு சிரப் ஆகிய 4 இருமல் மருந்துகளில் அளவுக்கு அதிகமாக டைஎத்திலீன் கிளைக்கால், எத்திலீன் கிளைக்கால் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த இருமல் மருந்துகளை குடித்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும். எனவே குறிப்பிட்ட 4 இருமல் மருந்துகளை யாரும் பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இறக்குமதி செய்யப்படுகின்ற மருந்துகளை முகவர் நிலையங்கள் மிக கவனமான முறையில் இறக்குமதி செய்வதாகவும் மேலும் விளைவுகளை ஏற்படுத்தும் எவ்வித மருந்துகளைம் இறக்குமதி செய்யவில்லை எனவும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை, இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் மற்றும் மருந்து விநியோகப் பிரிவு ஆகியவற்றின் ஊடாக இவ் விடயம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல்வேறு நாடுகளில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட மருந்துகளை பரிசீலனை செய்ததாகவும் அவ்வாறான இருமல் மருந்துகள் நாட்டில் கண்டறியப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு குறித்த இருமல் மருந்துகளின் பாவனை தொடர்பில் எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 71 = 79

Back to top button
error: