crossorigin="anonymous">
பிராந்தியம்

ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் மீலாதுன் நபி தினம்

(எம்.யு.எம்.முஸம்மில்)

புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு குருநாகல்  ஸாஹிரா மாதிரி மகா வித்தியாலயத்தில் மீலாதுன் நபி தின நிகழ்வுகளும் பரிசளிப்பு வைப்பவமும் எதிர்வரும் ஒன்பதாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் 12. 30 மணி வரை நடைபெறவுள்ளது.

ஸாஹிரா மாதிரி மகா வித்தியாலய அதிபர் ஏ . எம் .  சித்தீக் தலைமையில் நடைபெறும் விழா நிகழ்வுகளில் பிரதம அதிதியாக முன்னாள் ஆசிரியரும் பாதுகாப்பு படை அதிகாரியுமான யூ .எம். ராஸிக்  அவர்களும், விசேட அதிதிகளாக குருநாகல் வலைய கல்விப் பணிப்பாளர் கெ.இ.எம்.ஜி.டப்ளியு  பண்டார அவர்களும் , வடமேல் மாகாண கல்வித் திணைக்கள தமிழ் பிரிவு பிரதிப் பணிப்பாளர் எம். ஏ . ரியாஸ் முஹம்மது அவர்களும் ,

விசேட பேச்சாளராக கஹடோவிட முஅஸ்கர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியின் பணிப்பாளர் எம். இக்ராம் பாஸி அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 36 = 39

Back to top button
error: