crossorigin="anonymous">
பொது

பெற்றோல் விலை குறைப்பு

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி நேற்று (01) நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 40 ரூபாவினால் குறைவடையவுள்ளது. ஒன்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 30 ரூபாவினால் குறைவடையும்.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 410 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோலின் புதிய விலை 510 ரூபாவாகும். இதேவேளை ஏனைய எரிபொருளின் விலையில் மாற்றம் இல்லையென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்த வித மாற்றமும் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 1 =

Back to top button
error: