crossorigin="anonymous">
பிராந்தியம்

தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் கலந்துரையாடல்

தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று (20) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நாடளாவிய ரீதியாக தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள் கலந்துரையாடல் தேர்தல் ஆணைக்குழுவால் வழிநடாத்தப்பட்டு, தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியம் (IFES) மற்றும் ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம் (IRES) ஆகியன இணைந்து நடாத்துகின்றது.

இக் கலந்துரையாடலில் தேர்தல் ஆணைக்குழு தலைவரும் வழக்கறிஞர் திரு. நிமல் ஜி. புஞ்சிஹேவா, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் திரு. எஸ்.வி.டிவாரட்ன, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் திரு.எம்.எம்.மொஹமட், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் திரு.பத்திரன, தேர்தல் ஆணையாளர் நாயகம் திரு.சமன் ஸ்ரீ ரத்நாயக்க, மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன், தேசிய பணிப்பாளர் சில்ஜா பாசிலின்னா (IRES), பிரதி தேசிய பணிப்பாளர் லசந்தி டக்சன் (IFES), நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுளா கஜாநாயக்க(IRES),

மேலதிக தேர்தல் ஆணையாளர் (சட்டம் மற்றும் விசாரணை) திரு.B.P.C.குலரத்தன,
திட்டமிடல் ஆராய்ச்சி பணிப்பாளர் திரு.சன்ன டி சில்வா, மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், உதவி தேர்தல் ஆணையாளர் திரு.இ.கிறிஸ்ரி அமல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்

பிரதேச சபை தவிசாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், மீன்பிடி அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், விஷேட தேவையுடையோர் அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர் கழக பிரதிநிதிகள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார்ந்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 14 − = 13

Back to top button
error: