crossorigin="anonymous">
பிராந்தியம்

முல்லைத்தீவு செயலக அலுவலக தோட்ட அறுவடை

முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் கிளை ரீதியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு இயற்கை வழி வேளாண்மையின் அடிப்படையில் பயிரிடப்பட்டுள்ள அலுவலக தோட்டத்தின் இரண்டாம் கட்ட அறுவடை நேற்று (12) நடைபெற்றது.

அறுவடை ஊடாக கிடைக்கப்பெற்ற மரக்கறிகள் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் மற்றும் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன் முன்னிலையில் கிளை உத்தியோகத்தர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டு, குறித்த பணம் மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தில் வைப்பிலிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அலுவலக தோட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுக்கு ஊழியர் நலன்புரி சங்கத்தின் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது அறுவடை செய்யப்பட்ட மரக்கறிகள் 1100 ரூபாய் மற்றும் இளநீர் 2200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 7

Back to top button
error: