crossorigin="anonymous">
பொது

37 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று (08) பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

புதிய இராஜாங்க அமைச்சர்கள்:

1. ஜகத் புஷ்பகுமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு
2. ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி
3. லசந்த அழகியவன்ன – போக்குவரத்து
4. திலும் அமுனுகம – முதலீட்டு ஊக்குவிப்பு
5. கனக ஹேரத் – தொழில்நுட்பம்
6. ஜானக வக்கும்புர – மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்கள்
7. செஹான் சேமசிங்க – நிதி
8. மொஹான் டி சில்வா – விவசாயம்
9. தேனுக விதானகமகே – நகர அபிவிருத்தி, வீடமைப்பு
10. பிரமித பண்டார – பாதுகாப்பு
11. ரோஹண திஸாநாயக்க – விளையாட்டு, இளைஞர் விவகாரம்
12. அருந்திக பெனாண்டோ – நகர அபிவிருத்தி, வீடமைப்பு
13. விஜித பேருகொட – பிரிவெனா கல்வி
14. லொஹான் ரத்வத்தே – பெருந்தோட்ட கைத்தொழில்
15. தாரக பாலசூரிய – வெளிவிவகாரம்
16. இந்திக அநுருத்த – மின்சக்தி, வலுசக்தி
17. சனத் நிஷாந்த – நீர் வழங்கல்
18. சிறிபால கம்லத் – பெருந்தெருக்கள்
19. சாந்த பண்டார – வெகுசன ஊடகம்
20. அநுராத ஜயரத்ன – நீதி, சிறைச்சாலைகள்
21. எஸ். வியாழேந்திரன் வர்த்தகர்
22. சிசிர ஜயகொடி – சுதேச மருத்துவம்
23. பியல் நிஷாந்த – மீன்பிடி
24. பிரசன்ன ரணவீர – சிறு, நடுத்தர தொழில் முயற்சி
25. டீ.வி. சானக – வனஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு
26. டீ.பி. ஹேரத் – கால்நடை அபிவிருத்தி
27. ஷசீந்திர ராஜபக்ஷ – நீர்ப்பாசனம்
28. சீதா அரம்பேபொல – சுகாதாரம்
29. காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதாரம்
30. அசோக பிரியந்த – உள்நாட்டு அலுவல்கள்
31. அரவிந்த் குமார் – கல்வி
32. கீதா குமாரசிங்க – பெண்கள், சிறுவர் விவகாரங்கள்
33. சிவநேசதுரை சந்திரகாந்தன் – கிராமிய வீதி அபிவிருத்தி
34. சுரேன் ராகவன் – உயர் கல்வி
35. டயானா கமகே – சுற்றுலா
36. சாமர சம்பத் தஸநாயக்க – ஆரம்பக் கைத்தொழில்
37. அனூப பஸ்குவல் – சமூக வலுவூட்டல்

இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வில், பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 28 − = 21

Back to top button
error: