பாடசாலைகளிற்கு உடற்பயிற்சி நிலையங்கள்

மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் தேக ஆரோக்கியத்தினையும், உடற்பருமன் அதிகரிப்பினால் அவதியுறும் மாணவர்களின் நலன் கருதியும் மாநகர சபைக்குட்பட்ட பாடசாலைகளில் சிறுவர் நேய மாநகர செயற்றிட்டத்தின் ஊடாக யூனிசெப் மற்றும் செரி (CERI) நிறுவனங்களின் நிதி பங்களிப்புடன் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளிலும் அமைக்கப்படவுள்ள உடற்பயிற்சி நிலையங்களுக்கான உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
ஏற்கனவே, புனித மிக்கேல் கல்லூரி, வின்சன்ட் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலை, புனித சிசிலியா மகளீர் கல்லூரி, இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இப் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதுடன் வெகு விரைவில் இப் பயிற்சி நிலையங்கள் உத்தியோக பூர்வமாக மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.