crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

இத்தாலி மனிதநேய சங்கத்தால் கணவனை இழந்த பெண்ணுக்கு புதிய வீடு கையளிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புதுக்குடியிருப்பு 10ம் வட்டார பகுதியில் கணவனை இழந்த நிலையில் பெண் பிள்ளை ஒருவருடன் வாழ்ந்து வருகின்ற நிரவியறாஜ் சிவபாய்க்கியவதி அவர்களுக்கு இத்தாலி மனிதநேய சங்கத்தால் புதிய நிரந்தர வீடு ஒன்று அமைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி மனிதநேய சங்கத்தின் ஸ்தாபகர் மகேஸ்வரநாதன் கிருபாகரன் அவர்களுடைய கோரிக்கைக்கு அமைய 50வது பிறந்தநாளைக் கொண்டாடும் நல்லையா பாஸ்கரன் அவர்களின் நிதிப் பங்களிப்பில் அவரது தாயாரின் ஞாபகார்த்தமாக இராசமணி இல்லம் எனும் நாமத்துடன் குறித்த நிரந்தர வீடு அமைத்து பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 26 − 16 =

Back to top button
error: