crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நீதியரசர்கள் சத்தியப்பிரமாணம்

மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதியரசருமான அர்ஜூன ஒபேசேகர, உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் இன்று (14) முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக, மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோவும், மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சஷி மஹேந்திர, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வின்போது ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர அவர்களும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 98 − = 94

Back to top button
error: