crossorigin="anonymous">
பொது

வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி கடமையேற்பு

புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி நேற்று (25) அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் அலி சப்ரி, உள்நாட்டு நிர்ப்பந்தங்களையும் கருத்தில் கொண்டு, இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அமைச்சின் ஆணையை செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்தார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அமைச்சர் அலி சப்ரி சட்ட அறிக்கைகள் மற்றும் வெளியீடுகளில் தோன்றிய பல வழக்குகளுக்கான சட்டத்தரணியாக செயற்பட்டார். 2012 இல் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்ட அவர், 2009 இல் சட்டத்தில் சாதனை படைத்தமைக்காக ஆண்டின் சிறந்த இளம் நபருக்கான விருதைப் பெற்றார். அவர் 1997 இல் சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்கான இலங்கையின் துணைத் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

அமைச்சர் சப்ரி 2020 இல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2022 ஏப்ரல் 04ஆந் திகதி நிதி அமைச்சராக நியமிக்கப்படும் வரை, அமைச்சர் அலி சப்ரி 2022 ஆகஸ்ட் 12ஆந் திகதி முதல் நீதி அமைச்சராகப் பணியாற்றினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 2

Back to top button
error: