crossorigin="anonymous">
பிராந்தியம்

இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை நிலை நிறுத்துதல் செயலமர்வு

குழப்பம் மிகு சமகாலச்சூழலில் இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை நிலை நிறுத்துதல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்களை இளைஞர் யுவதிகள் கையாளும் விதம் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெலுதல் போன்றைவை தொடர்பிலான செயலமர்வு நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் இயக்குணர் ஏ.ஜேசுதாசன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தற்போதைய கால கட்டத்தில் இளைஞர் யுவதிகள் எதிர்கொண்டுள்ள சவால்கள், இளைஞர் யுவதிகள் எதிர்கெண்டுள்ள பொருளாதார சிக்கல்கள் மற்றும் நவீன தொடர்பாடல் சாதனங்களின் சாதக பாதக நிலைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சிரேஸ்ட வளவாளர்களான இருதையநாதன், மற்றும் கே.கணேசமூர்த்தி ஆகியோர் விளக்கமளித்தனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகள் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பிலும் அவற்றுக்கு எவ்வாறான தீர்வுகளை முன் வைப்பது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டிருந்தது.

செயலமர்வில் மட்டக்களப்பு கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் சமாதான செயற்த்திட்ட இணைப்பாளர் இ.கிறிஸ்டி மற்றும் கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: