crossorigin="anonymous">
உள்நாடுபொது

“பஸ் கட்டண அதிகரிப்பு எதிர்காலத்தில் பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கும்” – அமைச்சர் திலும்

எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனினும் பஸ்கட்டண அதிகரிப்பு குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கும் என போக்குவரத்து மற்றும் சமூக பொலீஸ் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (12) தெரிவித்துள்ளார்

கண்டியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

கோவிட்19 அச்சுறுத்தல் காணப்படும் இந்நேரத்தில் மக்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்த முடியாது. அத்தகையை நேரத்தில் பஸ் உரிமையாளர்கள் பாதிப்பு ஏற்படாத அதே நேரம் பொதுமக்களும் பாதிப்படையாத  முடிவு எடுக்கப்பட வேண்டும்.

ஜப்பானில் இருந்து பெறப்பட்ட கடனைப் பயன்படுத்தி அமைச்சகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாகவும் தவறாகக் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரி செலுத்தாது எந்த ஒரு நாட்டிலிருந்தும் எத்தகைய ஒரு வாகனத்தையும் இறக்குமதி செய்ய முன்னைய அரசு அனுமதி லழங்கி இருந்தது. ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை கருத்திற் கொண்டு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அதனை தடை செய்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

இத்தகைய வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கு சாதகமான அரசியல் நிலையை ஏற்படுத்த எதிர்க் கட்சிகள் பல்வேறு தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 70 = 76

Back to top button
error: