கோட்டாபய ராஜபக்ஸவின் விசா நிராகரிப்பு – ‘The Hindu’ பத்திரிகை

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இந்தியாவின் ‘The Hindu’ பத்திரிகை இன்று (12) செய்தி வெளியிட்டுள்ளது.
The Hindu பத்திரிகை கொழும்பில் உள்ள இராஜதந்திர அதிகாரி ஒருவரிடம் வினவியதையடுத்து, இந்த தகவலை வௌியிட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சாவின் சகோதரரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச நாட்டில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வேதேச விமான நிலையத்தின் ஊடக இன்று (12) அதிகாலை நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்தபோது அங்கிருந்த பயணிகளின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் அவரது ஆவணத்தை பரீட்சிக்க மறுத்தமையினாலும் அவரது பயணம் தடைப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
The #UnitedStates rejected Sri Lankan President #GotabayaRajapaksa’s recent request for a visa, amid growing speculation over the besieged leader’s “attempts to flee” the country after promising to quit office, reports @Meerasrini https://t.co/gV4nNf9hXK
— The Hindu (@the_hindu) July 12, 2022