crossorigin="anonymous">
பொது

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிலிருந்து விமான சேவை

இலங்கை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிலிருந்து நாடுகளுக்கிடையிலான விமான சேவைகள் எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் ,துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவைக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு

“அடிப்படை சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகள் 2019 நவம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும், கொவிட் 19 தொற்று நிலைமையால் அதன் நடவடிக்கைகள் 2020 மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாகப் பிற்போடப்பட்டுள்ளது.

அவ்விமான நிலையத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையம் வரைக்கும் வாடகை விமானத் தொழிற்பாடுகள் மற்றும் நேர அட்டவணைக்கமைவான விமானப் பயணங்களை மேற்கொள்வதற்காக சர்வதேச ரீதியாகவும் உள்ளுரிலும் நிறுவப்பட்டுள்ள விமானக் கம்பனிகள் தற்போது வேண்டுகோள்களைச் சமர்ப்பித்துள்ளன.

அதற்கமைய, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகளை 2022 யூலை மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பித்தல் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.”

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 34 − = 31

Back to top button
error: