crossorigin="anonymous">
பொது

இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்

இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் (27) இடம்பெற்றதுடன் அவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

01. ஜனநாயக, சுபீட்சமான மற்றும் இடர்களை எதிர்கொள்ளக் கூடிய இயலுமை கொண்ட இலங்கைக்கான வேலைத்திட்டம்

‘ஜனநாயக நல்லாட்சி மற்றும் ஓருமைப்பாட்டுக்கான ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டம்’ மற்றும் ‘காப்பீட்டுப் பொருளாதார விருத்தியை ஏற்படுத்தும் வேலைத்திட்டம்’ ஆகியவற்றுக்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்திற்கும் இடையே 2011 ஆம் ஆண்டில் இரண்டு ஒப்பந்தங்கள்; கையொப்பமிட்டுள்ளதுடன், அதற்கமைய, குறித்த இரண்டு வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

வினைத்திறனான ஜனநாயக ஆட்சி, காப்பீட்டு சந்தை அடிப்படையிலான விருத்தி மற்றும் இடர்கள் மற்றும் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கத் தேவையான வளங்களைப் பலப்படுத்தல் போன்ற துறைகளில் அடிப்படைக் கவனத்தைச் செலுத்தி ‘ஜனநாயக, சுபீட்சமான மற்றும் இடர்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய இயலுமை கொண்ட இலங்கைக்கான வேலைத்திட்டம்’ எனும் பெயரில் புதிய வேலைத்திட்டமொன்றை 2026 ஆம் ஆண்டு வரைக்கும் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் 57 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவராண்மை நிறுவனத்தின் (USAID) மூலம் பெற்றுக்கொள்வதற்கான புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த வழங்கலைப் பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்தல்

அடிப்படை சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகள் 2019 நவம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும், கொவிட் 19 தொற்று நிலைமையால் அதன் நடவடிக்கைகள் 2020 மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாகப் பிற்போடப்பட்டுள்ளது. அவ்விமான நிலையத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையம் வரைக்கும் வாடகை விமானத் தொழிற்பாடுகள் மற்றும் நேர அட்டவணைக்கமைவான விமானப் பயணங்களை மேற்கொள்வதற்காக சர்வதேச ரீதியாகவும் உள்ளுரிலும் நிறுவப்பட்டுள்ள விமானக் கம்பனிகள் தற்போது வேண்டுகோள்களைச் சமர்ப்பித்துள்ளன.

அதற்கமைய, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகளை 2022 யூலை மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பித்தல் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

03. புகையிரதப் போக்குவரத்துக் கட்டணங்களைத் திருத்தம் செய்தல்

அரச கொள்கைகளுக்கு அமைய பயணிகள் போக்குவரத்துக்காக இலங்கைப் புகையிரதத் திணைக்களம் சலுகை அடிப்படையிலான கட்டண முறையைப் பின்பற்றுகின்றது. ஆனாலும், அண்மைக் காலங்களில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட அதிகரிப்புக்களால் திணைக்களத்தின் மீண்டெழும் நட்டங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு செல்கின்றமையால், திருப்திகரமான புகையிரத சேவைகளை மேற்கொண்டு செல்வதற்கு இயலுமை கிட்டும் வகையில் திணைக்களம் ஈட்டுகின்ற வருமானத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது.

அதற்கமைய, ஐந்து (05) வருடங்களுக்கும் மேலாக திருத்தம் செய்யப்படாத புகையிரதப் பயணிகள் போக்குவரத்துக் கட்டணம், பதினான்கு (14) வருடங்களுக்கு மேலாக திருத்தம் செய்யப்படாத சரக்குகள் போக்குவரத்து மற்றும் தபால் போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சரக்குகள் போக்குவரத்துக்காக அறவிடப்படும் புகையிரதக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. ‘ஒன்றுபட்டு பயிரிடுவோம் – நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ – உணவுப் பயிர் உற்பத்திகள் தேசிய புரட்சி – 2022

தற்போது நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் துரிதமாகத் தீர்வு காண்பதற்காக விவசாய அமைச்சின் தலைமையின் கீழ் அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள், புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு உள்ளிட்ட ஏனைய அமைச்சுக்களையும் இணைத்துக் கொண்டு அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களுடன் நாடளாவிய ரீதியில் முறைசார் மற்றும் துரிதமாக உணவுப் பயிர் உற்பத்திகள் தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த வேலைத்திட்டம் விவசாயத் திணைக்களம் மற்றும் மாகாண விவசாய திணைக்களங்களின் தொழிநுட்ப ஒத்துழைப்பின் கீழ் விவசாய அமைச்சின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பௌத்த விகாரைகள் மற்றும் புனித பூமி, கிறீஸ்தவ தேவாலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் இந்துக் கோவில்களுக்குச் சொந்தமாகவுள்ளதும் பயிரிடக் கூடியதுமான 250,000 ஹெக்ரயர் காணிகளை பயிர்ச்செய்கைகளுக்காகப் பயன்படுத்தி ‘ஒன்றுபட்டு பயிரிடுவோம் – நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ – உணவுப் பயிர் உற்பத்திகள் தேசிய புரட்சி – 2022′ எனும் பெயரிலான குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர், விவசாய அமைச்சர் மற்றும் புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்துள்ள கூட்டான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. பெண் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக குடும்பப் பின்னணி அறிக்கை தொடர்பான தேவையை நீக்கல்

வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் புலம்பெயர் பெண் தொழிலாளர்களுக்கு 05 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் இன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் தற்போது நிலவுகின்ற ‘குடும்பப் பின்னணி அறிக்கை’ சமர்ப்பிக்கப்பட வேண்டிய கட்டாயத் தேவை இருப்பதால், பெண்களின் உரிமைகள் மீறப்படுவதாக பெண்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச அறிக்கைகள் பலவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வாறே ஒருசில சந்தர்ப்பங்களில் குறித்த அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காக தேவையான அனைத்துத் தகைமைகளையும் பூர்த்தி செய்திருப்பினும், ஒருசில அலுவலர்கள் பல்வேறு காரணங்களால் குறித்த அறிக்கையைத் தாமதப்படுத்துவதால் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக செல்வதற்கு எதிர்பார்க்கின்ற பெண்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையை சமர்ப்பித்தற்குத் தகைமையற்ற ஒருசில பெண்கள் வேறு சட்டவிரோத வழிமுறைகளைக் கையாண்டு எந்தவொரு கண்காணிப்புக்களும் இன்றி வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்களால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, இரண்டு (02) வயதோ அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள பெண்கள் வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது கட்டாயமாகக் குடும்பப் பின்னணி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனும் தேவையிலிருந்து விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

06. சிறுவர்கள் மற்றும் இளையவர் தொடர்பான கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சமவாயத்தில் 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு பிள்ளையும் சிறுவர் எனப் பொருள்கோடல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சமவாயத்திற்கு இணங்கியொழுகி குறித்த ஏற்பாடுகளை உட்சேர்த்து சிறுவர்கள் மற்றும் இளையவர் தொடர்பான கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2020 செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்திற்கமைய சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. சிறுவர் பாதுகாப்பு மற்றும் நீதி தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தல்

பாதுகாப்பு மற்றும் காப்பீடுகள் தேவையான பிள்ளைகள் தொடர்பாக வழக்கு விசாரணைகளுக்கோ அல்லது சட்டத்தை மீறுகின்ற பிள்ளையொருவருக்கு எதிராக வழக்கு விசாரணைக்காக நீதிமுறை அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் மற்றும் பிள்ளைகள் தொடர்பாக வேறு விதத்தில் நீதிமுறை அதிகாரத்தை செயற்படுத்தும் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு இயலுமை கிட்டும் வகையில் சிறுவர் (நீதிமுறைப் பாதுகாப்பு) தொடர்பான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2015 பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள அடிப்படை சட்டமூலத்திற்காக இரண்டு விசேட நிபுணத்துவக் குழுக்கள் மூலம் ஆராயந்து மேலும் முன்மொழிவுகள் சமர்;ப்பிக்கப்பட்டுள்ளன. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள அடிப்படை சட்டமூலத்தில் குறித்த முன்மொழிவுகளையும் உட்சேர்த்து இறுதிச் சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. மோசடிகளைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்

நொத்தாரிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் மரணசாதன கட்டளைச் சட்டங்களுக்காக மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு இணங்கியொழுகும் வகையில் மோசடிகளைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்திற்கு ஒருசில விளைவாய்ந்த தன்மையுடைய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, அதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2021 ஒக்ரோபர் மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. அற்றோனித்தத்துவ உரிமப்பத்திர கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்

போலியாகவும் மற்றும் சட்ட விரோதமாகவும் அற்றோனித்தத்துவ உரிமப்பத்திரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிச் செயற்பாடுகளைக் குறைப்பதற்காக அற்றோனித்தத்துவ உரிமப்பத்திர கட்டளைச் சட்டத்திற்கான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக 2021 யூலை மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. நீதிமன்றத்தை அவமதித்தல் தொடர்பாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தல்

இலங்கையில் நீதிமன்றத்தை அவமதித்தல் குற்றம், பொருள்கோடல் செய்யப்படாiயால் அவ்வாறான வழக்குகளை விசாரணை செய்வதற்கும் மற்றும் தீர்மானங்களை எடுப்பதற்கும் தெளிவானதும் ஒரே விதமானதுமான நடபடிமுறையொன்று தற்போது பின்பற்றப்படுவதில்லை. அதனால் நீதி வழங்கும் செயன்முறையில் தலையிடும் மட்டுப்பாடுகள் மற்றும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தின் கீழ் காணப்படும் மட்டுப்பாடுகள் தொடர்பாகப் புரிந்து கொள்வதில் சிரமங்கள் காணப்படுகின்றன. அதேபோல், நீதிமன்றத்தை அவமதித்தல் தொடர்பாக அண்மைக்காலத்தில் மோசமாக விமர்சனத்திற்குள்ளாகிய வழக்குகள் தொடர்பாகக் கவனத்தில் கொள்ளும் போது அதுதொடர்பான சட்டத்தை மீண்டும் கவனத்திலெடுத்தல் உகந்ததென கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொருத்தமான சட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் அதுபற்றிய விடயங்களை ஆராய்ந்து இலங்கை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் அடிப்படைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த அடிப்படைச் சட்டமூலத்திற்கமைய சட்டமொன்றை வகுப்பதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. நொத்தாரிஸ் கட்டளைச் சட்டத்திற்கான திருத்தங்களை அறிமுகப்படுத்தல்

காணி மோசடிகள் தொடர்பாக சட்ட விரோத செயற்பாடுகளைத் தடுக்;கும் நோக்கில் புதிய ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்காக நொத்தாரிஸ் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2021 யூலை மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நொத்தாரிஸ் ஆலோசனைக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள அடிப்படை சட்டமூலத்தின் பிரகாரம், பதிவாளர் நாயகத்தின் கருத்துக்களையும் கேட்டறிந்து சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. ஆவணங்;களைப் பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

காணிகள் தொடர்பான மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காகப் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக ஆவணங்;களைப் பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2021 யூலை மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தம்

இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அடிப்படைச் சட்டமூலத்திற்கு 2022.06.20 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணங்கியொழுகவில்லை என்பதை சட்டமா அதிபரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. பெற்றோலியப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற நாடுகளில் நிறுவப்பட்டுள்ள கம்பனிகளுடன் மேற்கொள்ளப்படும் நீண்டகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளல்

நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் விநியோகத்தில் 90மூ வீதமானவை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுவதுடன், எஞ்சிய 10மூ வீதமான விநியோகம் இந்திய ஒயில் கம்பனியால் மேற்கொள்ளப்படுகின்றது. தற்போது இலங்கை முகங்கொடுத்துள்ள வெளிநாட்டு செலாவணி நெருக்கடியால் நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவது மிகவும் சவால்மிக்க பணியாகவுள்ளது. இந்நிலைமையின் கீழ் பெற்றோலிய உற்பத்திகளை மேற்கொள்கின்ற நாடுகளில் நிறுவப்பட்டுள்ள எண்ணெய்க் கம்பனிகளுடன் நீண்டகால ஒப்பந்தங்களை மேற்கொண்டு எமது நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிக்கு அழுத்தங்கள் ஏற்படாத வகையில் குறித்த கம்பனிகளின் நிதியைப் பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிப்பதற்காக அக்கம்பனிகளுக்கு வாய்ப்புக்களை வழங்குவது பொருத்தமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, முறைசார்ந்த பொறிமுறைகளைப் பின்பற்றி தெரிவு செய்யப்படும் எண்ணெய்க் கம்பனிகளுடன் நீண்டகால ஒப்பந்தங்களை மேற்கொண்டு இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதி செய்தல், பகிர்ந்தளித்தல் மற்றும் விநியோகித்தலுக்காக குறித்த கம்பனிகளுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. ஜெட் ஏ–1 விமானங்களுக்கான எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிப்பதை உறுதிப்படுத்துவதற்காக புதிய விநியோகத்தர்களை அடையாளங் காணல்

இலங்கைக்கும் மற்றும் இலங்கைக்கு வெளியேயும் விமான சேவைகளின் தொழிற்பாடுகளுக்காக நாளாந்தம் 1.2 மில்லியன் லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதுடன், நாட்டில் தற்போதைய நிலைமையின் கீழ் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு விமானக் கம்பனிகளின் தொழிற்பாடுகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்குத் தேவையான குறைந்தபட்ச எரிபொருள் அளவைக் கூட விநியோகிப்பதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இயலாது போயுள்ளது.

இந்நிலைமையின் கீழ் விமான சேவை தொழிற்பாடுகளை முடக்கப்படாமல் தொடர்ந்து மேற்கொண்டு செல்வதற்கு இயலுமை கிட்டும் வகையில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் களஞ்சியக்காரர்களுக்கு ஜெட் ஏ-1 விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமி செய்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தலுக்கு அனுமதி வழங்குவதற்காக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 2

Back to top button
error: