crossorigin="anonymous">
உள்நாடுபொது

மீன்களின் இனப்பெருக்கத்திற்கு பேரூந்து மற்றும் புகையிரதப் பெட்டிகள் கடலில் இறக்கல்

வடக்கு கடலில் கடல் வாழ் உயிரினங்களின் இனப் பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளம் கண்டு பயன்படுத்த முடியாது கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மற்றும் புகையிரதப் பெட்டிகளை கடலில் இறக்கி விடுவதன் மூலம் மீன்களின் இனப் பெருக்கத்திற்கு ஏதுவான கடல் நீரடிப் பாறைக்கு இணையான சூழலை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் திணைக்களத்தினால் வடக்கு கடலில் நேற்று (11) ஆரம்பிக்கப்பட்ட  குறித்த செயற்திட்டத்தின் முதற் கட்டத்தில் சுமார் 30 பேரூந்துகளை கடலில் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலாவது தொகுதி பேரூந்துகளை காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து ஏற்றிச் சென்ற சயுரு எனும் கப்பல், அடையாளப்படுத்தப்பட்ட கடல் பகுதியில் குறித்த பேரூந்துகளை கடலின் அடியில் இறக்கியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 7 = 1

Back to top button
error: