crossorigin="anonymous">
பொது

இந்திய விசேட பிரதிநிதிகள் இலங்கை ஜனாதிபதி, பிரதமரை சந்திப்பு

அவசர பயணமொன்றை மேற்கொண்டு இந்தியாவிலிருந்து விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று இன்று (23) இலங்கை வந்தடைந்தது

இந்தியாவின் பிரதான பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழுவினரே இலங்கை வந்துள்ளனர்

இந்திய நிதி அமைச்சின் செயலாளர் அஜய் சேத் மற்றும் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் சகிதம் வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா அவர்கள்  இன்றைய தினம் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷமற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்

முதலீடுகளை மேம்படுத்தல், தொடர்புகள் மற்றும் பொருளாதார உறவுகளை வலுவாக்குதல் ஊடாக துரிதமான பொருளாதார மீட்சிக்கு இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக உள்ளதாக இச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையில் இலங்கையின் முக்கியஸ்தானம் குறித்தும் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்திய இலங்கை உறவின் மேம்பாட்டிற்காக இரு தரப்பும் தமது அர்ப்பணிப்பினை இச்சந்திப்பின்போது உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு மேலும் உதவிகளை வழங்குவது தொடர்பில் இலங்கை நிலவரத்தை ஆராய்வதற்காக இக்குழு வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 53 − = 44

Back to top button
error: