crossorigin="anonymous">
பொது

இராஜதந்திரிகள் – இலங்கை ஜனாதிபதி சந்திப்பு

தென்கிழக்கு ஆசிய வலய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தனர்

இந்த சந்திப்பு கோட்டை இலங்கை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (22)  இடம்பெற்றது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஆதரவையும் உதவியையும் ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார்.

புவியியல் நெருக்கத்தின் அடிப்படையில் இலங்கைக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, முதலீட்டு வாய்ப்புகள், விவசாய அபிவிருத்தி, கல்வி மற்றும் ஏனைய பல்வேறு துறைகள் குறித்து ஜனாதிபதி அவர்கள் தூதுக் குழுவின் தலைவர்களுக்கு விளக்கமளித்தார்.

பல்வேறு துறைகளில் தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இலங்கை ஏற்றுமதி செய்யக்கூடிய பண்டங்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் மியன்மார் தூதுவர் (Han Thu), மலேசிய உயர்ஸ்தானிகர் (Tan Yang Thai), வியட்நாம் தூதுவர் (Ho Thi Thanh Truc), தாய்லாந்து தூதுவர் (Poj Harnpol), இந்தோனேசிய தூதுவர் (Dewi Gustina Tobing) இலங்கை ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க மற்றும் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 − = 42

Back to top button
error: