crossorigin="anonymous">
உள்நாடுபொது

எரிபொருள் விலை திருத்தம் – வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு தீர்மானம்

கூட்டுத்தாபனத்தின் நட்டம் 33,100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது

எரிபொருளின் விலையில் திருத்தங்களை மேற்கொள்ள வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (11) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சநதிப்பில் அமைச்சர் தெரிவிக்கையில்,

நாட்டில் நிலவும் கொவிட் தொற்று பரவலுக்கு மத்தியில் இந்த திருத்தத்தை எப்பொழுது மேற்கொள்வது என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை பாரியளவில் உயர்ந்துள்ளது. தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரித்து மக்களின் வருமானமும் குறைந்துள்ளது. இதனால் கடந்த 21 மாதங்களில் எரிபொருளின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனினும் தொடர்ந்தும் அரசாங்கம் இந்த பாரிய நட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் உலக சந்தையில் எரிபொருள்ள விலை அதிகரித்த நிலையில் நீண்ட காலமாக விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படாத யுகம் இலங்கை வரலாற்றில் முன்னர் ஒருபோதும் இடம்பெறவில்லை என்றும் அமைச்;சர் கூறினார்.

எரிபொருள் விநியோகத்திற்கான செலவினத்தையும் விட தொடர்ந்தும் குறைந்த விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வதால் கடந்த வருடம் மத்திய காலப்பகுதி வரை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் நட்டம் 33 ஆயிரத்து 100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டுள்ளது வெளிநாட்டு முதலீடு குறைந்துள்ளது. வெளிநாட்டு பணியாளர்களிடம் இருந்து கிடைக்கும் வருமானமும் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது. இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் எரிபொருள் இறக்குமதிக்காக வருடாந்தம் மூன்று பில்லியன் டொலர்களை செலவிடும் சவாலை அரசாங்கம் எதிர்கொண்டு இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 6 = 13

Back to top button
error: