crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பபாடு, விழிப்புணர்வூட்ட சைக்கிள் ஓட்ட பவனி

இலங்கையில் தற்போதைய காலகட்டத்தில் நாட்டில் அனைவரும் எதிர்நோக்கி வரும் அசாதரண சூழ்நிலையான எரிபொருள் தட்டுப்பட்டிற்கு விழிப்புணர்வூட்டும் வகையில் சைக்கிள் ஓட்ட பவனியொன்றை புனித மிக்கேல் கல்லூரியின் சாரணப் பிரிவினால் நேற்று (04) மட்டக்களப்பில் நடாத்தினர்.

நாட்டில் காணப்படும் அசாதாரண சூழ்நிலையை சாத்தியமாக்கும் வகையிலும் மக்களுக்கு சைக்கிள் பாவனையை ஊக்குவிப்பது தொடர்பான விழிப்புணர்வினை எற்படுத்தும் வகையிலும் இடம்பெற்றது.

இவ் சைக்கிள் ஓட்ட பவனியை இயேசு சபைத் துறவி அருட்தந்தை போல் சற்குண நாயகம், புனித மக்கேல் கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர். அத்துடன், இயேசு சபைத் துறவி அருட்பணி சு.ரொசான் அடிகளார், மாவட்ட சாரணர் ஆணையாளர் வி.பிரதீபன், உதவி ஆணையாளர் ஜே.கிறிஸ்ரி மற்றும் புனித மிக்கேல் கல்லூரியின் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் பங்கு கொண்டனர்.

அசாத்தியமானதை சாத்தியமாக்குவோம் எனும் தொனிபொருளில் நடைபெற்ற சைக்கிள் ஓட்ட பவனியில் சாரண மாணவர்களும், அணித்தலைவர்கள் சபை உறுப்பினர்களும், சாரணிய ஆசிரியர்களும் இணைந்து சமூகத்துக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சைக்கிள் ஓட்ட பவனியானது புனித மிக்கேல் கல்லூரி முன்பாக காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி மட்டக்களப்பு நகரிலுள்ள மணிக்கூட்டுக்கோபுரத்தை அடைந்து அங்கிருந்து பிரதான வீதி வழியாக கல்லடிப்பாலத்தை அடைந்து அங்கிருந்து காத்தான்குடி ஊடாக ஆரையம்பதி வரை சென்று அங்கிருந்து மீண்டுமாக புனித மிக்கேல் கல்லூரியை வந்தடைந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 2

Back to top button
error: