crossorigin="anonymous">
ஆக்கங்கள்

“மண்ணை மேயும் மனம்” மற்றும் “பறப்பதற்கு ஆயிரம் இறக்கைகள்” நூல் வெளியீடு

பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம் நடாத்திய வ.துசாந்தனின் “மண்ணை மேயும் மனம்” மற்றும் “பறப்பதற்கு ஆயிரம் இறக்கைகள்” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (21) முனைக்காடு பண்னை, உக்டா சமூக வள நிலையத்தில் பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் த.மேகராசா (கவிஞர் மேரா) தலைமையில் இடம்பெற்றது.

முனைக்காடு மண் ஈன்ற ஆளுமையாளன், ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர் வயிரமுத்து துஷாந்தன் அவர்களின் முயற்சியினால் படுவான்கரையில் இருந்து ஒரே தடவையில் இரண்டு நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.

நூல்களின் வெளியீட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி திருமதி. புளொரன்ஸ் பாரதி கெனடி கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பத்தார்

நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக வைத்திய கலாநிதி தி.தவநேசன், மட்/போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி உசாந்தி துரைசிங்கம், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் சு.சந்திரகுமார் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

சுவாமி விபுலானந்தா அழகியற் ஈற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை விரிவுரையாளர் கலாநிதி த.விவேகானந்தராஜா, மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் (தமிழ்) க.குணசேகரம், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில், வரவேற்புரை மற்றும் வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றதனைத் தொடர்ந்து குணா மல்டி சொப் உரிமையாளருக்கு நூலாசிரியரினால் நூல்களின் முதற் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரதம அதிதி உள்ளிட்ட ஏனைய அதிதிகளிற்கும் நூலில் முதற் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது

இரு நூல்கள் தொடர்பான மதிப்புரை இடம்பெற்றதுடன், அதிதிகளின் உரையினை தொடர்ந்து நூலாசிரியரின் ஏற்புரையும், அதனைத் தொடர்ந்து நூலாசிரியரிற்கு பொன்னாடை போர்த்து, பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 − = 11

Back to top button
error: