crossorigin="anonymous">
வெளிநாடு

மன்கிபொக்ஸ் (monkeypox) வைரஸ் நோய் தொற்று அபாயம்

மன்கிபொக்ஸ் குரங்குகளிமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது

ஐரோப்பிய நாடுகளில் மன்கிபொக்ஸ் (monkeypox) வைரஸ் நோய் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் இதுவரை 100 பேருக்கும் மேல் மன்கிபொக்ஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தி நெதர்லாந்த், போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற ஐரோப்பிய நாடுகளில் மன்கிபொக்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் 1958 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குரங்குகளிடையே பரவிய மன்கிபொக்ஸ் (monkeypox) நோய் மனிதர்களிடையே 1970 ஆம் ஆண்டு காங்கோவில் பரவியதுடன் . குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதால் இந்த நோய் ‘மன்கிபொக்ஸ் (monkeypox) நோய்’ என அழைக்கப்படுகிறது.

மன்கிபொக்ஸ் வைரஸ் பாக்ஸ்வைரிடே (Poxviridae) குடும்பத்தில் உள்ள ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் (Orthopoxvirus) இனத்தைச் சேர்ந்தது. ஆரம்ப அறிகுறி ஃப்ளூ காய்ச்சல் போன்றே இருக்கும். நெறி கட்டுதலும், முகத்திலும் உடலிலும் ஏற்படும் தடிப்புகளும் இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாகும்

இந்த மன்கிபொக்ஸ் வைரஸ் பெரியம்மை, பசு, குதிரை மற்றும் ஒட்டகம் போன்றவற்றில் இருந்து பரவும் பாக்ஸ் நோயைச் சார்ந்தது.

இந்த மன்கிபொக்ஸ் நோய் வந்தால் காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, தசை வலி, மிகுந்த உடல் சோர்வு, கணுக்கால் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

காய்ச்சல் வந்த 3 நாட்களுக்குள் சருமத்தில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன. குறைந்தது 6 நாட்கள், அதிகபட்சமாக 21 நாட்கள் சிகிச்சை தேவைப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் (WHO) மன்கிபொக்ஸ் (monkeypox) நோய் தொற்று தொடர்பில்  நேற்று (20) வெள்ளிக் கிழமை அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 32 = 36

Back to top button
error: