crossorigin="anonymous">
வெளிநாடு

ஒரே பிரசவத்தில் பிறந்த ஒன்பது குழந்தைகள், ஒரு வயது பூர்த்தி

ஒன்பது குழந்தைகளும் கின்னஸ் சாதனையில்

மொராக்கோவின் – காசாப்ளாங்காவிலுள்ள ஐன் போர்ஜா மருத்துவமனையில் மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸேவுக்கு ஒரே பிரசவத்தில் 2021 மே 04 திகதி ஒன்பது குழந்தைகள் பிறந்தன. உலகில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஒன்பது குழந்தைகளுக்கு இந்த ஆண்டு மே 04 ஆம் திகதி ஒரு வயது நிறைவடைகிறது.

உலகளவில் உயிரோடு ஒரே பிரசவத்தில் அதிகபட்சமான குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறையாகும் இந்நிலையில் தங்கள் முதல் பிறந்தநாளைக் கொண்டாடும் 5 பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகளாக ஒன்பது குழந்தைகளும் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவர்களின் தந்தை தெரிவித்துள்ளார்

ஒரே பிரசவத்தில்  அதிக குழந்தைகள் பிறந்துள்ளதாக கின்னஸ் சாதனையில் இந்தக் குழந்தைகள் இடம் பிடித்துள்ளனர்.

சிஸ்ஸேவின் ஒன்பது குழந்தைகளும் கின்னஸில் இடம் பிடிப்பதற்கு முன்பாக, 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளைப் பெற்றெடுத்து, நாடியா சுலேமான் மற்றும் அவருடைய 8 குழந்தைகள் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தறிந்தமையும் குறிப்பிடத்தக்கது

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 37 − = 32

Back to top button
error: