crossorigin="anonymous">
உள்நாடுபொது

வருமான வரியை அதிகரிக்க கூடிய புதிய வரவு செலவு திட்டம்

பொருளாதார நெருக்கடி மேலும் 2 வருடம் நீடிக்க கூடும்

இலங்கையில் வருமான வரியை அதிகரிக்க கூடிய புதிய வரவு செலவு திட்டமொன்றை சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் 2021 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு அமைய செயற்படுவது சிரமம் என்பதினாலேயே புதிய வரவு செலவுத்திட்டத்தை சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாக நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி  நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்பான நிகழ்ச்சி நிரலை தொடர்வதற்கு மேலும் சுமார் 6 மாத காலம் செல்லக்கூடும் என்றும் இலங்கையில் கொண்டுள்ள வெளிநாட்டு நாணயத்தில், தற்பொழுது பயன்படுத்தக்கூடிய தொகை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்திருப்பதாக நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நேற்று  பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்

சர்வதேச நாணய நிதியத்துடன் நிதி அமைச்சர் தலைமையிலான குழு நடத்திய பேச்சு வார்த்தை தொடர்பாக பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் விளக்கமளிக்கும் பொழுதே இதனை அவர் தெரிவித்தார்.

இலங்கையில் தற்பொழுது பொருளாதார நெருக்கடி மேலும் 2 வருட காலம் நீடிக்க கூடும், 2 வருட காலத்திற்குள் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வை காண முடியுமா? என்பது தொடர்பில் சிந்திக்க முடியாது. இரண்டு வருட காலத்திற்குள் தீர்க்க முடியுமா? அல்லது 10 – 11 வருடங்களில் தீருமா? என்பது தொடர்பில் தீர்வு நமது கையிலேயே உண்டு என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், வரி அதிகரிக்கப்பட வேண்டிய காலத்தில் நாம் வரியை குறைத்தோம். இது வரலாற்று தவறாகும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.. அமைச்சர் கூறினார்.

கொடுக்க வேண்டியவற்றுக்கு பதிலாக வேறோன்று வழங்கப்பட்டது. அதன் பிரதிபலனையே நாம் இன்று அனுபவிக்கிறோம். கடந்த 2 வருட காலப்பகுதியில் 8 பில்லியன் கடன் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடமளவில் சுற்றுலா பயணிகளின் மூலமான வருமானம் 2 மில்லியனாக குறைவடைந்தது. இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை நாம் எதிர்க்கொண்டோம். இதனை தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. அனைத்து அரசாங்கங்களும் தெளிவற்ற பொருளாதார சிந்தனையுடன் செயல்பட்டுள்ளன. இதனாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 26 + = 30

Back to top button
error: