crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு மாநகர சபையின் 59 வது அமர்வு

மட்டக்களப்பு மாநகர சபையின் 59வது அமர்வுக்கான (49வது பொதுக் கூட்டம்) இன்று (07) வியாழக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் மு.ப 9.30 மணியளவில் மாநகர முதல்வரின் வருகையைத் தொடர்ந்து மாநகர கீதம் இசைக்கப்பட்டு, இறை வணக்கத்தினை தொடர்ந்து மாநகர முதல்வரின் தலைமை உரையுடன் சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது கடந்த சபை அமர்விற்கான கூட்டறிக்கை அங்கீகரிக்கப்பட்டதுடன், முதல்வர் அவர்களின் அறிவிப்புக்கள் சபையில் முன்வைக்கப்பட்டது.

இதன்போது மாநகர சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆணையாளரான என்.மதிவண்ணன் அவர்களை சபைக்கு முதல்வரினால் வரவேற்கப்பட்டது

சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிதிக் குழுவின் சிபார்சுகள், முதல்வர் அவர்களின் முன்மொழிவுகள், உறுப்பினர்களால் கொண்டு வரப்படும் பிரேரணைகள், உறுப்பினர் கந்தசாமி ரகுநாதனினால் மாநகர எல்லைக்குள் செயற்படுகின்ற சிகையலங்கார நிலையங்களில் மாணவர்களுக்கான சிகை அலங்காரத்தின் போது பாடசாலை நடைமுறைக்கு ஒப்பான ஓர் நடைமுறையை கைக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,

அதேபோன்று மாநகர எல்லைக்குள் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் அறநெறிப் பாடசாலைகள் நடைபெறுகின்ற பகல் வேளையில் ஏனைய பிரத்தியேக வகுப்புகள் நடாத்தப்படுவதை தடை செய்வதற்கும் என இவ்விரு விடயங்களுக்குமான சபை அனுமதியைக் கோரிய பிரேரணையும், புதிய ஆணையாளருக்கான அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களும் இதன்போது முன்வைக்கப்பட்டு அதற்கான சபை அனுமதி வழங்கப்பட்டு, புதிய உறுப்பினராக இன்றைய தினம் சத்தியப்பிரமானம் மேற்கொண்ட சி.மேகராஜ்ஜின் கன்னி உரையினைத் தொடர்ந்து சபை அமர்வுகள் முதல்வரினால் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 88 − 78 =

Back to top button
error: