crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மத்திய மாகாணத்தில் கொவிட்19 மரண எண்ணிக்கை 381 ஆக உயர்

மத்திய மாகாண கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தலை மாவட்டங்களிலிருந்து பதிவான கொவிட்19 தொற்றாளர்கள் எண்ணிக்கை நேற்று 5ம் திகதி மாத்திரம் 24 மணி நேரத்தில் 431 ஆக உயர்ந்துள்ளதுடன் மத்திய மாகாணத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை இன்று (06) வரை 19,980 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்தது.

மத்திய மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான கொவிட்19 நோய்த் தொற்றுகள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அவ் எண்ணிக்கை 10,783 ஆகப் பதிவாகியுளதைு. நுவரெலியா மாவட்டத்தில் மொத்தம் 4,762 ஆகவும் மாத்தலை மாவட்டத்தில் 4,435 ஆவும் பதிவாகியுள்ளன.

மத்திய மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய தொற்றதனர்களின் எண்ணிக்கை 431 ஆகும். இதில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 214 பேரும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 160 பேரும், மாத்தலை மாவட்டத்தில் இருந்து 57 பேரும் பதிவாகியுள்ளனர்.

மத்திய மாகாணத்தில் இதுவரை கொவிட்19 காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 381 ஆக உயர்ந்துள்ளது. கண்டி மாவட்டத்தில் இருந்து 235 பேரும், மாத்தலை மாவட்டத்தைச் சேர்ந்த 74 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 72 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 85 = 95

Back to top button
error: