crossorigin="anonymous">
பிராந்தியம்

பல பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் கைது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 14 மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேகநபர் குருநாகல், வெல்லவ, பொதுஹெர, நிட்டம்புவ, வெலிவேரிய, வரகாபொல, ஜா-எல, வெயங்கொட மற்றும் பேலியகொட பொலிஸ் பிரிவுகளில் 14 மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளார்.

நேற்று (19) காலை கட்டுநாயக்க வலானகொட என்ற இடத்தில் வைத்து கட்டுநாயக்க பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இடிகொல்ல, பொல்பித்திகம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் இன்று (20) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 74 + = 79

Back to top button
error: