crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை பாராளுமன்ற அமர்வு ஒழுங்கு பத்திரம்

இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (09) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் வருட ஆண்டறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை இன்று (09) நடத்தாமல் இருப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (08) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அந்த விவாதத்தை ஆகஸ்ட் மாத முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்தில் ஒரு தினத்தில் நடாத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 62 + = 65

Back to top button
error: